kOyil@Home – ஸத் ஸங்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில்கள், மடங்கள், இல்லங்களில் எழுந்தருளியுள்ள அர்ச்சாவதார எம்பெருமான் ஸௌலப்யத்தின் எல்லை நிலமாகவே இருக்கின்றான். தான் எல்லாவற்றுக்கும் தனிப்பெரும் தலைவனாய் இருப்பவன் தன்னை வழிபடவும் தகுதிகூட இல்லாத மனிதர்கள் கையில் தன்னை ஒப்படைத்து ஒவ்வொன்றுக்கும் அவர்கள் கையை எதிர்பார்த்திருக்கும் எளிமையை என் என்பது! எம்பெருமானின் அர்ச்சாவதார ஸௌலப்யம் இணையதளத்தில் காணலாம் – http://ponnadi.blogspot.in/p/archavathara-anubhavam.html . எம்பெருமானார் சாஸ்த்ரம் காண்பித்தபடிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் வாழ்வில் கேசவ பக்தியும் ஸாது ஸங்கமும் இரண்டு முக்யமான விஷயங்கள் என்றுரைப்பார்.

பாரத தேசத்துக்கு வெளியிலும், ஏன் திவ்ய தேசங்களுக்கு வெளியிலும் கூட எம்பெருமான்/ஆழ்வார்/ஆசார்யர்கள் மட்டுமே எழுந்தருளியுள்ள ஸந்நிதிகள் காணக் கிடைப்பது அபூர்வமாதலால் அத்தகைய ஸத் ஸங்கமும் துர்லபம் ஆனதால் நம் ஞான பக்திகளை வளர்த்துக்கொள்ள நம் இல்லங்களிலேயே ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியது அவச்யம். ஸஹ பாகவதர்களோடு இரண்டு/மூன்று மணி நேரம் ஞாயிறு போன்ற வார விடுமுறைகளில் தொடங்கி, பின்னர் சனி/ஞாயிறு என்று வருவோர் எண்ணிக்கை/ஆர்வம் பொறுத்து இது செய்யலாம். விசேஷ நாள்கள், ஆழ்வார்/ஆசார்யர்கள் திருநக்ஷத்ரங்கள் அன்றும் செய்யலாம்.  ஆழ்வார்/ஆசார்யர்கள் திருநாள்கள் இணைய தலத்தில் பார்க்கவும் – http://acharyas.koyil.org/index.php/full-list/ .

நிகழ்ச்சி நிரல்

 • காலை எட்டு மணிக்கு (அல்லது வசதிக்கேற்ப) யாராவது ஒருவர் இல்லத்தில் சந்திப்பது. சுழற்சி முறையில் ஒவ்வொருவர் இல்லத்திலும் நடத்தலாம்.
 • திருவாராதன அறையிலிருந்து பெருமாளை ப்ரதான அறைக்கு எழுந்தருளப் பண்ணி, புஷ்ப தூப தீபங்கள் தயார் செய்யவும். நாமே சிறு மாலைகள் தொடுக்கலாம்.
 • இல்லத் தலைவர் லகு திருவாராதனம் ஸமர்ப்பிக்கலாம். திருவாராதனம் இணைய தளம் பார்க்க – http://srivaishnavagranthamstamil.wordpress.com/2013/12/13/srivaishnava-thiruvaaraadhanam/ . இது ஒரு 10/15 நிமிடங்கள் ஆகும்.
 • திவ்ய ப்ரபந்த சேவாகாலம் – பொதுத் தனியங்கள், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், இராமானுச நூற்றந்தாதி ஸேவித்து எந்த ஆழ்வார்/ஆசார்யர் திருநக்ஷத்ரமோ அவர் கிரந்த/ப்ரபந்த அனுசந்தானம் செய்வது. ஸ்ரீ பகவத் கீதை, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் மற்றும் பூர்வாசார்ய ஸ்தோத்ரங்களையும் இதில் சேவிக்கலாம். இது ஒரு முப்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை ஆகலாம்.
 • உபந்யாஸம்/கலந்துரையாடல் – நம் ஸம்ப்ரதாயத்தின் முக்யமான கொள்கைகளைப் பற்றிப் பேசியே ஞானத்தை வளர்த்துக் கொள்ள முடியும். முதலில் “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி” (https://srivaishnavagranthamstamil.wordpress.com/simple-guide-to-srivaishnavam/) மற்றும் நம் குருபரம்பரை (https://guruparamparaitamil.wordpress.com/2015/03/14/introduction-2/) ஆகிய விஷயங்களில் தொடங்கலாம். நம் koyil.org வலைத்தளத்தில் இது போன்ற பல தலைப்புகள் (திவ்ய ப்ரபந்தம், கீதை, க்ரந்தங்கள்) பல மொழிகளில் உள்ளன. ஓரிருவர் இக்கட்டுரைகளைப் படித்து, இவற்றிலிருந்து குறிப்பெடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு ஆழ்ந்த விஷயங்களை எளிதில் விளக்கலாம். இவ்வாறு சில மாதங்களிலேயே அடிப்படைக் கொள்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது எழும் ஸந்தேஹங்களையும்/கேள்விகளையும் எங்களுக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பித் தெளிவுபெறலாம் (koyil.org@gmail.com). இந்தப் பகுதிக்கு ஒரு மணி நேரம் வரை ஒதுக்கலாம்.
 • பெருமாளுக்குத் தளிகை – போகம் – இது ஒரு பத்து நிமிடங்கள் ஆகலாம்.
 • சாற்றுமுறை – இது ஒரு 10/15 நிமிடங்கள் ஆகலாம்.
 • பஜனை மற்றும் நாம ஸங்கீர்த்தனம் ஒரு பத்து நிமிடங்கள் செய்யலாம். எம்பெருமான், ஆழ்வார் ஆசார்யர்கள் விஷயமான பாடல்களையே பாட வேண்டும்.
 • ப்ரஸாத விநியோகம் இறுதியில் ஒரு 10/15 நிமிடங்கள்.

குறிப்பு: சில வேளைகளில் மாலை நேரங்களில் ஸந்நிதி/மடத்து ஸந்நிவேசங்களில் திருவாராதநம் சமர்ப்பிப்பது சரியாக இராது, அப்போதுகளில் பாசுரங்கள் ஸேவித்தபின் கேள்வி/பதில், வகுப்புகள், குழு விவாதங்கள் வைத்துக்கொள்ளலாம்.

குறிக்கோள்

இந்த முயற்சியின் குறிக்கோள், நல்ல கைங்கர்யபரர்களைத் தயார் செய்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களைக் கைங்கர்யத்த்தில் ஈடுபடுத்துவதே

முக்கியக் குறிப்புகள்

 • இப்போதுகளை எப்போதும் பக்தி பூர்வமான விஷயங்களை மட்டுமே சேர்ந்து அனுபவிக்க வேண்டும். யாவரும் குறித்த நேரத்துக்கு வந்து, தெய்வீக/ஸாம்ப்ரதாயிக விஷயங்களைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும்.
 • தன்னடக்கமும் கூட்டு முயற்சியுமே இந்த முயற்சியின் வெற்றிக்கு முக்கியம். இந்த ஸத் ஸங்கத்தை நடத்துபவர்கள் பெரியோர்களுடன் வழி நடத்துதலுடனும் இதில் ஈடுபாடு கொண்டவர்களின் துணையுடனும் இதை நடத்த வேண்டும்.
 • ஸாம்ப்ரதாயிக  கிரந்த வாசிப்பு, ஸாம்ப்ரதாயிக காலக்ஷேப ச்ரவணம், உபந்யாசம் கேட்டல் முதலியன அவசியம் செய்ய வேண்டும். http://koyil.org/index.php/printed-books – பல மொழிகளில் எளிய விளக்கங்கள் புத்தக வடிவில் உள்ளன. http://koyil.org/index.php/e-books/ – பல மொழிகளில் எளிய விளக்கங்கள் பதிவிறக்கம் செய்ய வசதியாக ஈ-புத்தக வடிவில் உள்ளன.
 • திவ்ய ப்ரபந்தம், ஸ்தோத்ர பாடம், ரஹஸ்ய க்ரந்த நூல்கள் ஆகியவைகளைக் கற்றல் மிகவும் அவச்யம். http://pillai.koyil.org/index.php/2017/06/dhivya-prabandham-santhai-recordings/ – பல சந்தை வகுப்புகள் மற்றும் எளிய விளக்கங்கள் ஒலிப்பதிவுகள் உள்ளன.

சிறியோரை ஈடுபடுத்துதல்

 • குழந்தைகளையும் முனைப்போடு நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தி பெருமாளிடம் அவர்கள் அன்பைப் பெருக்க வேண்டும்.. http://pillai.koyil.org வலைத்தளத்தில் குழந்தைகளையும் சிறுவர்/சிறுமியரையும் ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடுத்தப் பல விஷயங்கள் உள்ளன. ஸத் ஸங்கம் நடக்கும்போது, ஒரு பெரியவர் குழந்தைகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டு அவர்களுக்கு சலிப்புத் தட்டாமல் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வினா/விடை (க்விஸ்) போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு ஞான பக்திகளை வளர்க்கும் பரிசுகளை வழங்கலாம்.
 • சிறியோருக்கான விளையாட்டுகள்
  • அந்தாக்ஷரி – திவ்ய தேசங்கள், எம்பெருமான் திருநாமங்கள் கொண்டு விளையாடலாம். உதாரணம் – ஒருவர் மாதவன் என்றால், அடுத்தவர் நம்பி எனலாம் – இவ்வாறு தொடர்ந்து விளையாடலாம்.
  • ஞாபக சக்தியை வளர்க்கும் விளையாட்டுகள். உதாரணம் – ஒருவர் க்ருஷ்ண என்பார். அடுத்தவர் க்ருஷ்ண, ராம என்பார். அதற்கு அடுத்தவர் க்ருஷ்ண, ராம, கேசவ என்பார். இவ்வாறு முன்கூறிய்வர் சொன்னதை மறக்காமல் சொல்லும் விளையாட்டு.
  • பல அற்புத/தெய்வீக விளையாட்டுகள் உள்ளன – http://srimaaninfotech.org/ .

கேள்வி/பதில் நேரம்

 • 15/30 நிமிடங்கள் முன் வாரம் நடந்ததை விவாதிக்கப் பயன்படுத்தலாம்
 • இதை முடிவில் வைத்துக் கொள்ளலாம். ஞானம் வளர்வதற்கு, ஸந்தேஹங்களை தைரியமாகக் கேட்கச் செய்து அவற்றைத் தெளிவு படுத்துவது மிகவும் அவச்யம்.

தொழில்நுட்ப வசதிகள்

 • வெவ்வேறு ஊர்கள்/திவ்ய தேசங்களில் இடங்களில் இருப்போர் ஸ்கைப் (skype) போன்றவற்றைக் கொண்டு கலந்து கொண்டு பயன் பெறலாம்.

பங்கேற்பு

 • முதலில் இவற்றை நம் இல்லங்கள்/குடும்பங்களில் துவங்கி நாளடைவில் இவற்றை சமூக அளவில் விரிவு படுத்தவேண்டும். பஞ்ச ஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீவைஷ்ணவர்களையும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ள விரும்புவோரையும் சேர்த்துக்கொண்டு நாளடைவில் இதை விரிவான ஒரு பாகவத கோஷ்டியாக்க வேண்டும்.

நமக்குள்ள தகவல் தளங்கள்

தொடர்புக்கு

ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸங்கம் நிகழ்ச்சி நடத்தவும், பங்கு பெறவும் விருப்பமுள்ளோர், எங்களை koyil.org@gmail.com அல்லது +91-8220151966 மூலம் தொடர்பு கொள்ளவும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன் (மொழி பெயர்ப்பில் உதவி – ஸ்ரீ சடகோபன் ஸ்வாமி)

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org