Announcements

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Scroll down for recent announcements …

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் முறை:

  • ஸ்மார்ட் ஃபோனில் “free conference call” appஐ play/app storeஇல் இருந்து பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளவும். appஐத் திறந்து, meeting id “koyil_org” என்று எழுதி “Join” பொத்தானைக் க்ளிக் செய்யவும்.
  • அல்லது, 01725199047 என்ற எண்ணை டயல் செய்து “200739#” என்ற எண்ணை அழுத்தி நேரடியாக வகுப்பில் கலந்து கொள்ளவும்.
  • மேலும் விவரங்களுக்கு – https://www.freeconferencecall.com/wall/koyil_org/

https://www.youtube.com/c/KoyilOrg Youtube சேனலில் Subscribe செய்து – எல்லா ஸந்தை மற்றும் வ்யாக்யானங்களைக் கேட்டு/கண்டு மகிழலாம்.


How to connect to our online sessions?

Subscribe to koyil.org Youtube channel – https://www.youtube.com/c/KoyilOrg and see all of the santhai/lectures in there directly.


🌹🌹 punarpUsam sathsangam – emperumAnAr and dhivyadhESams – English discourse – May 2nd and 3rd – 8.30PM to 9.30PM IST 🌹🌹

The sunday after every punarpUsam, we are having an online sathsangam for the Sishyas and abhimAnis of SrI vAnamAmalai mutt who are residing outside India. This time, we will be having two days of English discourse on “emperumAnAr and dhivyadhESams” on Saturday and Sunday May 2nd and 3rd – 8.30PM to 9.30PM IST. Anyone interested can connect to the call through phone/internet using the following details.


🌹🌹 பயிற்சி முகாம் (ஆன்லைன்)/Spiritual Camp (online) – May 2 – 3 🌹🌹

* சென்ற முறை பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நேராகக் கலந்து கொள்ளலாம்.
* Those who registered for previous camp, need not register again. They can directly join the sessions.

Registraion form – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfNeNABz0ds-kJcM5am37KeMhHjBe2YQpBxQTNxSdg33YLkNg/viewform

ஸத்விஷய பொழுதுபோக்கு – சிறுவர்/சிறுமியர் ஆகியோரை எப்படி ஸம்ப்ரதாய விஷயத்தில் ஈடுபடுத்துவது – பயிற்சி முகாம் (ஆன்லைன்). முக்யமாக 7 முதல் 15 வயது உள்ளவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு. ஆனாலும், ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் எவரும் பங்கு கொள்ளலாம்.

மே 2 சனிக்கிழமை மற்றும் 3 ஞாயிற்றுக்கிழமை
நேரம் – பிற்பகல் 3.30 முதல் 4.30 வரை (இந்திய நேரப்படி). முதல் 40 நிமிடங்கள் – வகுப்பு. அடுத்த 20 நிமிடங்கள் – ஸந்தேஹங்களைக் கேட்டுத் தெளிவு பெற.

பங்கு பெறும் குழந்தைகள் நன்றாக ஊன்றிக் கவனித்து விஷயங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, இந்த வகுப்புகள் முடிந்த பிறகு இதிலிருந்து தாங்கள் புரிந்து கொண்டதை ஐந்து நிமிடங்களுக்குள் இருக்குமாறு ஒலிப்பதிவு செய்து எங்களுக்கு அனுப்பினால் அதை எங்கள் வலைத்தளத்தில் எல்லோரும் அனுபவிக்கும்படிப் பகிர்வோம்.

Spiritual Engagement for Children – spiritual camp (mainly thamizh – Online). How to engage children in spiritual activities. Mainly for children of ages 7 to 15 and Parents. But anyone interested to learn the basics are welcome to join.

Saturday May 2nd and 3rd (Saturday and Sunday).
Time – 3.30 PM to 4.30 PM IST

Children who are participating should fully observe the class and once the classes are over, can record what they understood from these classes in an audio recording for less than 5 minutes, and send it to us. We will publish those recordings for the benefit of everyone, in our website.


🌹🌹புதிய ஸந்தை வகுப்புகள் ஏப்ரல் 20, திங்கள் கிழமை முதல் (ஃபோன்/இன்டெர்னெட் மூலம்) – New santhai classes starting on April 20, Monday (through phone/internet)

முதல் மற்றும் இரண்டாம் திருவந்தாதிகள் முடிந்து தற்பொழுது பேயாழ்வார் அருளிய *மூன்றாம் திருவந்தாதி* கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம்.

*மாலை வேளை – 7.30pm முதல் 8.30pm வரை (இந்திய நேரப்படி) – மூன்றாம் திருவந்தாதி அர்த்தத்துடன் – புதிய ஸந்தை*

காலை வேளை – 11.30am முதல் 12.30pm வரை (இந்திய நேரப்படி) – பெரிய திருமொழி – அர்த்தத்துடன்

புதிதாக இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் (இதுவரை பதிவு செய்யவில்லை என்றால்), இந்தப் படிவத்தை நிரப்பவும் –> https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeBAh-zp52yx8gZ2e9gw54JUpa1kJMfhQJBjXUS5IiLfjXgVA/viewform .

After completing mudhal and iranNdAm thiruvandhAdhi, now, we are starting to learn pEyAzhwAr’s *mUnRAm thiruvandhAdhi*.

*Evening session – 7.30pm to 8.30pm IST – *mUnRAm thiruvandhAdhi* with meanings – new santhai class*

Morning session – 11.30am to 12.30pm IST – periya thirumozhi with meanings

For new members, who have not yet registered, please register for the class by filling up this form –> https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeBAh-zp52yx8gZ2e9gw54JUpa1kJMfhQJBjXUS5IiLfjXgVA/viewform .

Completed, on-going class recordings available at http://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/ .


🌹🌹 thirumUlam sathsangam/திருமூலம் ஸத்ஸங்கம் – 19 Apr 2020 – நம்மாழ்வாரின் பகவத் குணானுபவம் – தொடர் விளக்கவுரை – பகல் 2 முதல் 3 மணி வரை (இந்திய நேரப்படி), nammAzhwAr’s bhagavath guNAnubhavam – thamizh discourse series – 2 PM to 3 PM (IST)

மாதந்தோறும் திருமூலத்தை முன்னிட்டு அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமையில் மஹாராஷ்ட்ராவில் தானேயில் ஸ்ரீவைஷ்ணவ ஸத்ஸங்கம் நடக்கிறது. அந்த அடியார்களின் வேண்டுதலுக்கேற்ப, நாம் இம்முறை (19 Apr 2020) “நம்மாழ்வாரின் பகவத் குணானுபவம் – தொடர் விளக்கவுரை” அனுபவிக்க இருக்கிறோம். பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் நம் (ஸாம்ஸாரிகமான) தோஷங்களை நினைப்பது பயத்துக்குக் காரணமாகும் என்றும் பகவத் குணங்களை நினைப்பது பயம் நீங்குவதற்குக் காரணமாகும் என்றும் விளக்குகிறார். திருவாய்மொழியில் பகவத் குணங்களை நம்மாழ்வார் எப்படி அனுபவித்தார் என்பதை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயம் என்ற க்ரந்தத்தில் அற்புதமாக விளக்கியுள்ளார். மணவாள மாமுனிகள் இதற்கு மிக அழகான வ்யாக்யானம் அருளியுள்ளார். இவற்றைக் கொண்டு, பகவத் குணங்களை நாமும் அனுபவிப்போம். ஸ்ரீவைஷ்ணவ ஸத் விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.

Every month, on account of thirumUlam, on the Sunday after thirumUlam, a SrIvaishNava sathasangam is conducted in Thane, Maharashtra. Based on the request of the bhAgavathas of this sathsangam, we will be enjoying “nammAzhwAr’s bhagavath guNAnubhavam – thamizh discourse series” this time (19 Apr 2020). piLLai lOkAchAryar mercifully explains in SrIvachana bhUshaNa dhivya SAsthram that thinking about the defects of self (in samsAra) will lead to fear and thinking about bhagavAn’s qualities will lead to removal of fear. azhagiya maNavALap perumAL nAyanAr beautifully explains in his AchArya hrudhayam, how nammAzhwAr enjoyed bhagavAn’s qualities in thiruvAimozhi. mAmunigaL has given a beautiful commentary for the same. We will enjoy bhagavAn’s qualities with the help of these wonderful works. Those who are interested in SrIvaishNava sath vishayams can participate.


🌹🌹 emperumAnAr uthsava sathsangam/எம்பெருமானார் உத்ஸவ ஸத்ஸங்கம் – Apr 19 to 28 – எம்பெருமானாரும் திவ்யதேசங்களும் – தொடர் விளக்கவுரை – பகல் 3.30 முதல் 4.15 மணி வரை (இந்திய நேரப்படி), emperumAnAr and dhivyadhESams – thamizh discourse series – 3.30 PM to 4.15 PM (IST)

ஆண்டுதோறும் எம்பெருமானாரின் திருநக்ஷத்ர மஹோத்ஸவம் அனைத்து திவ்யதேசங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு நம்முடைய துர்பாக்யத்தாலே அதை இழந்து நிற்கிறோம் நாம். இந்த ஸமயத்தில் நாம் நம் இல்லத்திலேயே தினமும் எம்பெருமானார் உத்ஸவத்தைப் பத்து தினங்கள் கொண்டாடி ஓரளவுக்கு அந்த வருத்தத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். நாம் ஒவ்வொரும் நம் இல்லத்தில், ஏப்ரல் 19 தொடக்கமாக, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருவாய்மொழி (ஒரு நாளைக்கு ஒரு பத்து), இராமானுச நூற்றந்தாதி சேவித்து, எம்பெருமானிடம் மீண்டும் திவ்யதேசங்களிலும் மற்றைய ஸ்தலங்களிலும் முன்புபோல் உத்ஸவங்கள் மற்றும் கைங்கர்யங்கள் சிறப்பாக நடக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து மங்களாசாஸனம் செய்வோம்.

மேலும், எம்பெருமானாருக்கும் பல திவ்யதேசங்களுக்கும் இருக்கும் ஸம்பந்தத்தை சுருக்கமாக அனுபவிக்கலாம் என்ற ஆசையாலே 19 ஏப்ரல் தொடக்கமாக 28 ஏப்ரல் ஈறாக, தினமும் பிற்பகல் 3.30 முதல் 4.15 வரை (இந்திய நேரப்படி), இந்தத் தலைப்பில் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஸ்ரீவைஷ்ணவ ஸத்விஷயங்களில் ஆசை உடைய அனைவரும், முக்யமாக சிறுவயதினர் அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமானார் அனுபவத்தில் திளைத்திருக்கலாம்.

Every year emperumAn’s thirunakshathra uthsavam is celebrated in a grand manner in all dhivyadhESams. Due to our misfortune, we are unable to celebrate them in temples this year. To overcome such sorrow to some extent, let us all celebrate emperumAnAr thirunakshathra uthsavam at our homes. Starting on April 19, everyone of us, can at least recite thiruppallANdu, kaNNinuN chiRuththAmbu, thiruvAimozhi (1 centum per day) and rAmAnusa nURRandhAdhi and pray to emperumAn for quick resumption of uthsavams and kainkaryams at all dhivyadhESams and all other holy abodes, and perform mangaLASAsanam for the same.

Also, with the desire to enjoy emperumAnAr’s relationship with many dhivyadhESams, adiyen is planning share a little bit every day on this topic from Apr 19 to 28, from 3.30 PM to 4.15 PM (IST). Those who are interested in SrIvaishNava sath vishayams, especially children are requested to join and be immersed in emperumAnAr anubhavam.